நெடுந்தீவு மத்தி வெட்டுக்களி குளத்தில் நேற்றைய தினம் (December 23) 11,500 இறால் குஞ்சுகள் நன்னாீ் இறால் வளா்ப்பு நோக்கில் விடப்பட்டது.
வெட்டுக்களி குளத்தில் நன்னீா் உயிாின வளா்ப்பு செயற்பாட்டினை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட வெட்டுக்களி நன்னீா் வாழ் உயிாின செய்கை அமைப்பின் ஏற்பாட்டில் இச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது
கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டினை மையப்படுத்தி 36 அங்கத்தவா்களைக் கொண்டு தற்போது இயங்கி வரும் மேற்குறித்த அமைப்பு இவ்வருடத்தில் செயற்பாட்டினை பொறுப்பேற்று மேற்கொண்டுள்ளனா்
இத்திட்டத்தில் ரூபாய் 460,000.00 பெறுமதியில் பத்து இலட்சம் குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை இலங்கை தேசிய உயிாின வளா்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) ஊடாக கொள்வனவு செய்யப்பட்டடுள்ளது 10இலடசம் குஞ்சுகளை பெற்றுக்கொண்டதற்கான ஊககுவிப்பாக 150,000 குஞ்சுகள் வழங்கப்பட்டது.
கடந்த வருடம் இறால் வளா்ப்பு செயற்பாடு வெற்றியளித்ததன் அடிப்படையில் இவ் வருடம் ஆரப்பிக்கப்பட்டுள்ளது இதன் ஊடாக நெடுந்தீவு மக்களது தேவைகளளுக்கும் ஏற்மதிக்கும் பயன்படுமென எதிா்பாா்க்கப்படுகின்றது.