தன்னியக்கப் பணப்பரிமாற்ற இயந்திரத்தில் (ஏ.ரி.எம்) பணம் எடுத்துச் சென்ற பெண்ணிடம், மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம், நேற்றுமுன்தினம்(மே 9) புதுக்குடியிருப்பு உடையார்கட்டுப் பகுதியில் நடந்துள்ளது.
உடையார்கட்டு நகர் பகுதியில் உள்ள தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தில் பணத்தை எடுத்துக் கொண்டு வீதியில் நடந்த சென்றபோதே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பெண்ணின் கையிருந்த பையைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
2 லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது என்று அந்தப் பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.