யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வேர்ல்ட் விஷன் நிறுவனமும் இணைந்து நடாத்திய விஷேட தேவையுள்ள சிறுவர்களுக்கான அர்த்தமுள்ள குதூகலிப்பும் பிறந்த நாள் கொண்டாட்டமும் அண்மையில் சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்துகொண்டு “விஷேட தேவைகளுடைய சிறுவர்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்புக்கள் பற்றி கருத்து தெரிவித்தார்.
இந்த நிகழ்வு உடல்ரீதியாக அங்கவீனமுற்ற விசேட மாணவர்களை மகிழ்வூட்டும் நோக்கில் சாவகச்சேரி, நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த 100 மாணவர்களை உள்ளடக்கியதாக நடைபெற்றதுடன் கலந்துகொண்ட சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
வளவாளராக கலந்துகொண்ட உளவள வைத்தியர் திருமதி. முல்லை பரமேஸ்வரன் அவர்கள் “விஷேட தேவைகளையுடைய சிறுவர்களின் திறன்களை மேம்படுத்தல்” தொடர்பாக கருத்துக்கூறினார்.
செம்முகம் ஆற்றுகைக் குழுவினரால் சிறுவர் நாடகமும், இதம் குழுவினரால் மானுடம் வெல்லும் நாடகமும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.