இந்த ஆண்டின் இறுதிக்குள் வங்கி வட்டி வீதங்களை ஒற்றை இலக்கத்துக்குக் கொண்டுவர முடியும் என்று ஜனாதிபதியின் பணிக்குழாம் மட்டப் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
பொருளாதார நெருக்கடியின்போது வங்கி வட்டி வீதங்கள் 34 சதவீதமாக இருந்தன. ஆனால் அவை தற்போது 16 முதல் 17 சதவீதமாக உள்ளது என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் வங்கி வட்டி வீதங்களை ஒற்றை இலக்கத்துக்குக் கொண்டுக் கொண்டுவர முடியும். சிறு, நடுத்தர உரிமையாளர்கள் மீண்டும் வலுப்பெறுவார்கள் – என்றார்.