*ராகமையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்! பொலிஸ் தீவிர தேடுதல்!!*
கொரோனா தொற்றுக்குள்ளாகி ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபரொருவர் தப்பியோடியுள்ளார். பேலியகொட பகுதியை சேர்ந்த இந்த நபரை கைது செய்ய பொலிஸார் தேடுதல் நடத்தி வருகின்றனர்.இவர் பொது போக்குவரத்தில் பயணித்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.
இதேவேளை கொழும்பு மாநகரசபையின் ஊழியரொருவரின் தாயாருக்கு மினுவாங்கொடை தொற்றுக்கூடாக கொரோனா தொற்றியுள்ளதால் மாநகரசபையின் சுமார் 250 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன .