யாழ்.மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் மாவட்டத்தை முடக்குவதா? இல்லையா? என்பதை அரசாங்கம் தீர்மானிப்பதில்லை என்றும், மக்களே அதனை தீர்மானிக்கிறார்கள் எனவும் இராணுவ தளபதியும், தேசிய கொவிட் 19 தடுப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளமை குறித்தும், தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்புக் குறித்தும் கருத்து தொிவிக்கும்போது அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்
யாழ்.மாவட்ட மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றவேண்டும். மாவட்டத்த்தில் சில பகுதி முடக்கப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற பயணங்களை தவிர்த்து சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு பூரணமான ஒத்துழைப்பினை மக்கள் வழங்கவேண்டும் எனவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்