யாழ்ப்பாணம் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் நேற்று (மே25) இடம்பெற்றயாழ்.மாவட்ட ஆசிரியர் நியமன நிகழ்வில் கலந்து கொண்டு
வடமாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் 375 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கி வைத்தார்.
இதன்போது ஜனாதிபதி கடந்த காலங்களில் யாழ்பாணத்தில் காணப்பட்ட“யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியம்” நாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறந்தமுன்னுதாரணமாகத் திகழ்வதாகவும், அந்தக் கல்வி முறையை மீளமைக்க தாம்செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்ததுடன் ஆசிரியர் தொழில் முன்மாதிரியாகஇருக்க வேண்டும் எனவும், ஆசிரியர்கள் கோசங்கள் எழுப்பிக் கொண்டு வீதியில்ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தால் மாணவர்களால் நிராகரிக்கப்படுவார்கள்எனவும் தெரிவித்த ஜனாதிபதி, தொழில் கௌரவத்தைப் பேணுவது அனைத்துஆசிரியர்களினதும் பொறுப்பு எனவும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களானதர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், குலசிங்கம்திலீபன், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோருடன், முன்னாள் இராஜாங்க அமைச்சர்விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட வட மாகாண அரசியல் பிரதிநிதிகள், வடமாகாண கல்வி செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில்கலந்துகொண்டனர்.