யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் alphenix digital subscription angio CT ஸ்கானர் இயந்திரம் உத்தியோகபூர்வமாக இன்று 21 கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மட்டுமே காணப்படும் இந்த ஸ்கானர் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் சி. யமுனானந்தா கருத்து தெரிவிக்கையில்
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இன்று சுகாதார அமைச்சினால் கையளிக்கப்பட்ட இந்த digital subscription angio CT சுமார் 150 மில்லியன் ரூபா பெறுமதியானது. இது கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு அடுத்ததாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் செயற்பட போகின்றது.
நோயாளிகளின் குருதி கலங்களில் நாடிகள் நாளங்களில் ஏற்படும் அடைப்புகள் ஏற்படும் போது இந்த கருவி மூலம் இலகுவாக கண்டறியமுடியும் மேலும் சிறுநீரகத்துக்கு செல்லும் குருதி கலங்கள் அடைப்பு, மூளைக்கு செல்லும் குருதி கலங்கள் அடைப்பு இதயத்தில் ஏற்படும் அடைப்புகள் அதாவது குருதி வால்புகளில் பெரு நாடிகளில் ஏற்படும் அடைப்புகளை இலகுவாக கண்டறியலாம்