5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணம், ஆறுகால்மடத்தில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக் கழக மாணவர்களை இலக்கு வைத்தே போதைப் பொருள் மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன என்று தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸ் உபபரிசோதகர் தே.மேனன் தலைமையிலான குழுவினரே சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.