புங்குடுதீவு பிரதேசத்தினை சேர்ந்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறைக்கு வருகை தந்த கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண் பயணம் செய்ததாக கூறப்படும் இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலைக்கு சொந்தமான பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவதாக நடாத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையிலேயே இத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. உறுதிப்படுத்தப்பட்ட நபர் மேலதிக சிகிச்சைக்கான கொழும்புக்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவார் எனக் கூறப்படுகின்றது.
இதுவரை நடாத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளில் புங்குடுதீவு உட்பட தீவுப்பகுதிகளில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.