நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்களால் இன்றைய தினம் நெடுந்தீவின் மூத்த கலைஞன் திரு.அ.அமிர்தநாயகம் அவர்களுக்கான கௌரவம் வழங்கப்பட்டது.
நெடுந்தீவில் நாடகங்கள் பல நாட்டுக்குத்துக்களுக்க சொந்தகாரரான இவர் பல்வேறு பாத்திரங்கள் ஏற்று நடித்து மக்கள் புகழ் பெற்ற ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடைமுறைப் படுத்தப்படும் பன்னிரண்டு மாத விளக்கு வேலைத்திட்டத்தின் கீழ் விஷேட தேவையுடைய கலைஞர்கள் கௌரவிப்பு எனும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இன்றைய தினம் இவ் மூத்த கலைஞருக்கு வாழ்வியலுக்கு தேவையான பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இச் செயற்றிட்டத்தின் கீழ் கடந்த மாதம் நெடுந்தீவு பொது நூலகத்திற்கு குறிப்பிட்ட புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.