முல்லைத்தீவில் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடி மற்றும் களப்பு மீன்பிடிகளில் சட்டவிரோத மீன்பிடியை தடுத்தல் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழுமற்றும் விசேட கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும்தற்போதைய கள நிலமைகளை ஆராயும் பொருட்டு விசேட மீளாய்வுக் கூட்டம்இன்றைய தினம் (மே29) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன்மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
சட்டவிரோத மீன்பிடியை தடுப்பது தொடர்பான விடயத்தில் சட்டவிரோதமாகமீன் பிடிப்பவர்களை கட்டுப்படுத்தல் மற்றும் அவர்களுக்கு எதிரான சட்டங்களைஅமுல்படுத்தல் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் கடற்தொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின்உதவி ஆணையாளர் கா.மோகனகுமார், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் , மீனவ சங்கம் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள், கடற்தொழிலாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.