2023 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக்கூட்டம் நேற்று (ஒக்ரோபர் 5) பிற்பகல் 2.00ம ணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய 05 பிரதேச செயலகங்களிலிருந்தும் கோரப்படுகின்ற காணிகளினைப் காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுவில் அங்கம் வகிப்போர் பரிசீலனை செய்து அனுமதியளித்தனர்.
மேலும் மாவட்டத்தின் காணிப்பயன்பாடு தொடர்பான அபிவிருத்தி பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இறுதியாக மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் கிளையின் உதவிப்பணிப்பாளர் திரு.கு.முரளிதரன் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
இக் கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) திரு. க.கனகேஸ்வரன் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திரு. எஸ். குணபாலன் , பிரதேச செயலாளர்கள், ஏனைய அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.