பாதுகாப்பான போக்குவரத்துப் பாவனையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தல் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில்(மே 15) மாவட்டசெயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
குறிப்பாக பாடசாலை மாணவர்களையேற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கான வாகனத்தரிப்பிடங்களை சுண்டிக்குளி மகளீர் கல்லூரி மற்றும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கு அருகாமையில் அமைத்தல், பழைய பூங்கா வீதியை ஒருவழிப்பயணப் பாதையாக மாற்றுதல் மற்றும் பாரவூர்திகள் பாடசாலை நேரங்களில் பயணிப்பதை தவிர்ப்பதற்கான சட்ட ஏற்பாடுகள், பாடசாலை ஆரம்பிக்கும் முடிவடையும் நேரங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தேவைப்பாடு என்பன தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் பீடாதிபதி (மருத்துவபீடம் யாழ் பல்கலைக்கழகம்), மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், ஆணையாளர் (யாழ் மாநகரசபை), அதிபர் (யா.சென்ஜோண்ஸ் கல்லூரி), பிரதி அதிபர் (யா.சுண்டுக்குளி மகளீர் கல்லூரி), சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்,தலைவர் (சமூக மற்றும் குடும்ப மருத்துவம்), பிரதி திட்டமிடல் பணிப்பாளர் (பிரதேசசெயலகம் யாழ்ப்பாணம்), தொழில்நுட்ப உத்தியோகத்தர் (நிலஅளவையியல் திணைக்களம்) மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய நகரம் மற்றும் துறைசார் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.