யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணியுடன் தொடா்புடைய மேலும் 08 பேருக்கு கொரோனா தொற்று இன்று (டிசம்பா் – 19) உறுதியாகிள்ளது. இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப்பீட ஆய்வுக்கூடத்தில் 110 பேருக்கான பரிசோதனையை மேற்கொண்ட போது நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 5 பேருக்கும், சண்டிலிப்பாய் பிரிவை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதியானது.
இதே நேரம் முல்லேரியா ஆய்வுக்கூடத்தில் 300 பேருக்கான பரிசோதனை செய்த போது உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதியானது.