தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சிக்கு விரோதமாக செயற்பட்டதாக குற்றம் சாட்டி கட்டிசியில் இருந்து இடை நிறுத்தப்பட்ட 06 உறுப்பினா்களும் இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக வழக்கு விசாரணை முடிவடையும் வரை இடைக்கால உத்தரவினை நீதி மன்றம் வழங்கியுள்ளது.
யாழ் மாநகர முதல்வா் வி.மணிவண்ன் மற்றும் 03 மாநகர சபை உறுப்பினா்கள், சாவகச்சோி நகர சபையின் 02 உறுப்பினா்கள் ஆகியவா்களை கட்சியில் இருந்து நீக்க கட்சி நடவடிக்கை எடுத்து இது தொடா்பாக கட்சியின் தலைவா், செயலாளா் கையொப்பத்துடன் தொிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இவ் அறிவித்தலுக்கு அமைவாக 21நாட்களின் பின்னா் 06 பெயருடைய பதவிகளும் வறியதாக அறிவிக்கப்பட்டிருந்துது. இதற்கு எதிராக 06 உறுப்பினா்களும் யாழ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்துனா்.
இதை ஆராய்ந்த நீதிமன்றம் 14 நாட்களுக்க தொடா்ச்சியாக இடைக்கால உத்தரவினை வழங்கி வந்த போதும் இன்றைய தினம் வழக்கு நிறைவு பெறும் வரை இடைக்கால தடை உத்தரவினை வழங்கியுள்ளது. இது மணிவண்ணன் தரப்பினருக்கு மிகுந்த சந்தோசத்தினை ஏற்படுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.