பிரான்ஸ் நாட்டிலிருந்து கடல் வழியாக லண்டன் சென்ற யாழ் இளைஞர் பலி!

Anarkali  - Senior Editor
1 Min Read

சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து முகவர் ஊடாக கடல் வழியாக லண்டன் சென்ற போது கடந்த 4 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிக புலம் பெயர் அகதிகள் வழியாக லண்டன் சென்று குடியேறிவருகின்றனர்

இந்த நிலையில் சாவகச்சேரி கச்சாய்ப் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சண்முகராசா டினேஸ் என்ற இளைஞர் லண்டன் செல்லும் நோக்கத்துடன் பயணித்த போது உயிரிழந்துள்ளார்.

இவரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டவில்லை சடலத்தை பெறுப்பேற்க உறவினர்கள் முயற்சி செய்து
வருகின்றனர் குறித்த பயணம் மிகவும் ஆபத்து நிறைந்த பயணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article
Exit mobile version