மட்டக்களப்பைச் சேர்ந்த மதுஷிகன் இன்றைய தினம் (மே 28) பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுரியின் பழைய மாணவரான இவர் இந்தச் சாதனையை புனித மிக்கேல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவில் நிகழ்த்தியிருப்பது சிறப்பம்சமாகும்.
20 வயதுடைய ஜனாதிபதி சாரணர் விருது பெற்ற மதுஷிகன் இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான 30 கிலோ மீற்றர் தூரத்தை இன்று அதிகாலை நீந்தத் தொடங்கி இன்று பிற்பகல் 2 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க வேண்டும் என்பது நீச்சல் வீரர்கள் பலரினதும் அபிலாஷையாக இருந்து வருகின்றது. ஆனால் இதை நீந்திக் கடக்கின்றமை என்பது மிகப் பெரிய சவால் நிறைந்ததாகும்.
பெரும் சவால்களை முறியடித்து சுமார் 12 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக நீந்தி இலக்கை அடைந்துள்ள மதுசிகனுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணமுள்ளன.