இலங்கை போக்குவரத்துசபையினால் பழைய இரும்பிற்காக விற்பனை செய்யப்படவிருந்த இரட்டை தட்டு பேருந்து ஒன்று, மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரசாயக்க ஆரம்பப்பாடசாலையின் நடமாடம் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த பாடசாலைக்கு கடந்த மாதம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ சென்றிருந்தார். இதன்போது, மாணவன் ஒருவர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த பேருந்து, பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
நடமாடும் பேருந்து நூலகத்தை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்று மாணவர்களிடம் ஒப்படைத்தார்.