ஈழத்தின் கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமையினை தன்னகத்தே கொண்ட தீபச்செல்வன் எழுதிய முதல் கவிதை நூலான “பதுங்கு குழியில் பிறந்த குழந்தை“ 16 ஆண்டுகளின் பின் மும்மொழி ஆற்றலையும், மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு ஆற்றலையும் தன்னகத்தே கொண்ட அனுஷா சிவலிங்கத்தின் மொழியாக்கத்தில் சிங்களத்தில் நூலாக நேற்று(செப்ரெம்பர் 29) வெளிவந்தது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நூல் வெளியீடு சிறப்பாக இடம்பெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு பெருமளவான சகோதரமொழி படைப்பாளிகள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
முதல் குரலாக முதற் தொகுப்பு வழி சிங்கள சமூகத்துடன் பேசத் துவங்கும் கவிஞர் தீபச்செல்வனின் முயற்சிப் பயணத்திற்கு பலரும் வாழ்துத் தெரிவித்துள்ளனர்.