“மீண்டும் ஊருக்குப் போகலாம்” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு ஊரும்உறவும்(DO-U) அமைப்பினால் உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவுஉறவுகளை ஒன்றிணைத்து 04.08.2024 தொடக்கம் 10.08.2024 வரைநடைபெற இருக்கும் “நெடுவூர்த் திருவிழா” தொடர்பான கலந்துரையாடல்நெடுந்தீவு ஊரும் உறவும் அலுவலகத்தில் இடம்பெற்றது.
நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தகலந்துரையாடலில் நெடுந்தீவு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர்மற்றும் சம்மேளன தலைவர் உட்பட சம்மேளன உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் எதிர்வரும் ஆவணி மாதம்இடம்பெறவிருக்கும் நெடுவூர்த் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாகவும் குறித்ததிருவிழாவை சிறப்பாக நடாத்தி முடிப்பது தொடர்பாகவும் இதில்இளைஞர்களினதும் சம்மேளனத்தினதும் பங்களிப்பு தொடர்பாகவும்கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது