நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இன்று (ஆகஸ்ட் 04) சிறப்பான முறையில் ஆரம்பமாகியுள்ளது “நெடுவூர்த்திருவிழா” 2024.
ஆரம்பநாளாகிய இன்று (ஆகஸ்ட்04) காலை விருந்தினர்களை மாவிலித் துறைமுகத்தில் வரவேற்று அங்கிருந்து வரவேற்பு நடனம் மற்றும் சாரணர்களின் அணிவகுப்புடன் தேவா கலாச்சார மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்களும் கௌரவ விருந்தினராக அஞ்சல் திணைக்கள சிரேஸ்ட பிரதி அஞ்சல்மா அதிபதி ராஜித கே. ரணசிங்க அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக நெடுந்தீவு பிரதேச செயலர் நிவேதிகா கேதீசன், ஆட்பதிவுத் திணைக்கள வட மாகாண உதவி ஆணையாளர் அ.கிருபாகரன்,
யாழ் மாவட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் எஸ்.சிவகரன் , நல்லூர் பிரதேச சபை செயலாளர் , வடமாகாண விளையாட்டு திணைக்கள் நிர்வாக உத்தியோகத்தர் , நெடுந்தீவின் மதகுருக்கள், பாடசாலை அதிபர்கள் என பலர் கலந்துகொண்டதுடன் , வெளி மாவட்ட மக்கள், புலம்பெயர் உறவுகள் என கலந்து கொண்டனர்.