நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினர் நெடுந்தீவு பாடசாலைகள் மற்றும் கோட்டக்கல்வித் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக நெடுந்தீவு கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தற்போதைய கொவிட் 19 நிலமைக்கு பின்னர் பாடசாலைகள் பல சுகாதார கட்டுப்பாடுகளுடன் ஆரம்பிக்கப்படுகின்றது சுகாதார பாதுகாப்பு செயற்பாடுகளின் ஓர் அங்கமாக பாடசாலைகளில் மாணவர்கள் நோய்வாய்படுகின்ற போது ஓய்வு அறை மற்றும் முதலுதவி உபகரணங்கள், உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவிகள் என்பன முக்கியமான தேவைகளாக காணப்படுவதனை உணர்ந்து கல்விச் சமூகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக கனடா மக்கள் ஒன்றியத்தினர் பாடசாலைகளுக்கு கட்டில், மெத்தை முக்கிய மருந்துகள் அடங்கிய முதலுதவிப் பெட்டி, உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவிகள் என்பன வழங்கப்பட்டன
மகாவித்தியாலயம், றோ.க.மகளிர் கல்லூரி சைவப்பிரகாச வித்தியாலயம், சீக்கியாம்பள்ளம் அ.த.க.பாடசாலை, மங்கையற்கரசி வித்தியாலயம், ஸ்ரீறிஸ்கந்தா வித்தியாலயம், சுப்ரமணிய வித்தியாலயம், மாவிலித்துறை றோ.க.த.க.பாடசாலை ஆகிய எட்டு பாடசாலை அதிபர்கள் கரங்களிலும் மேற்குறிப்பிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
இப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் நெடுந்தீவுக் குழுத் தலைவர் திரு.செ.மகேஸ் அவர்கள், தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.பொன்னையா இரவிச்சந்திரன் அவர்கள், நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.கே.அன்ரன் மரியதாஸ் அவர்கள் தாதிய உத்தியோகத்தர் தயாபரன் ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்