நெடுந்தீவு பிரதேச செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான புதுவருடத்தினை வரவேற்றல் மற்றும் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று(ஜனவரி 1) பிரதேச செயலர் எவ். சி. சத்தியசோதி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் காலை சிறப்பாக இடம்பெற்றது.
அனைத்து ஊழியர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந் நிகழ்வில், பிரதேச செயலரால் தேசியக் கொடி ஏற்றப்பட தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் அரச சேவை சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு சிறப்புற இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கிராம அலுவலர்களுக்கான தினக்குறிப்பேடு மற்றும் அலுவலர்களுக்கான குறிப்பேடு என்பனவும் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலர், சமுர்த்தி முகாமையாளர் , கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.