நெடுந்தீவு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் (பாதீடு) – 2026 இன்றைய தினம் (16/12) உறுப்பினர்களது ஒப்புதலுடன் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றப்பட்டது.

நெடுந்தீவு பிரதேச சபையில் 13 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்ற போதும் ஒரு உறுப்பினர் அனுமதிபெற்ற சொந்த விடுப்பில் சென்றிருந்தமையால் இன்றைய அமர்வில் அவர் கலந்துகொள்ளவில்லை.
2026 இனை வருமானத்தை அதிகரிக்கும் ஆண்டாக பிரகடனப்படுத்தி பிரதேச சபை செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் அனைத்து உறுப்பினர்களாலும் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது,