நெடுந்தீவு கிழக்கு ஆலமாவனப்பதியில் எழுந்தருளியிருக்கும் தீவின் சிவாலயமாகவும் போற்றப்படும் ஆலமாவன சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த மார்கழி மகோற்சவ பெருவிழா ஆரம்பமாக விருக்கின்றது.
நிகழும் சுபகிருது வருடம் மார்கழித்திங்கள் 13ம் நாள் நாளை (28 டிசம்பர்) புதன்கிழமை பூர்வபக்க சஷ்டி திதியும் சதயநட்சத்திரமும் கும்பலக்கினமும் கூடிய நன்நாளில் உதயத்தின் முன் திருவெம்பாவை மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறவுள்ளது.
மேலும் வேட்டைத் திருவிழாவானது 04 தை 2023 புதன்கிழமையும் தேர் திருவிழாவானது 05 தை 2023 வியாழக்கிழமையும் தீர்த்தத்திருவிழாவானது 06 தை 2023 வெள்ளிக்கிழமையும் நடைபெறுகின்றது.
ஆலமாவன கலைக்குழுமத்தால் நடாத்தப்படும் திருவாசகப் போட்டிகளும் பரிசளிப்பும் 07 தை 2023 சனிக்கிழமை பகலும் மாலை பூங்காவன உற்சவமும் மறுநாள் 08 தை 2023 ஞாயிற்றுக்கிழமை பகல் மஹா கோமாதா யாகம் கோபூஜை என்பனவும் மாலை வைரவர் உற்சவமும் இடம்பெறும் என்பதை அடியார்களுக்கு தெரிவித்து நிற்கினறார்கள் ஆலய பரிபாலன சபையினர்