நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கோட்ட மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு – 2024 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன்11) ஆரம்பமாகவுள்ளது.
நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் ஜூன்11 செவ்வாய் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி இரு தினங்கள் இடம்பெறவுள்ளது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக தீவக வலய கல்விப் பணிப்பாளர் ரி. ஞானசுந்தரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவக வலய உடற்கல்வி உதவி பணிப்பாளர்மு. காந்தசெல்வன் அவர்களும் தீவக வலய உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர் தி. துஸ்யா அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.