பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நெடுந்தீவு மக்களுக்காக அமைக்கப்பட்ட கடற்றொழில் சங்கக் கட்டடம் இன்று (டிசம்பர் 16) திறந்து வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினரின் 10 இலட்சம் ரூபா நிதி உதவியுடன் குறித்த கட்டடம் மீள்புனரமைப்பு செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது, கடற்றொழில் சங்கம் மற்றும் சமாசங்களுடன் தொடர்புடையவர்களுக்கான மேலதிக தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
டித்வா புயலின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும் என கடற்றொழில் சங்கத்தினர் பாராளுமன்ற உறுப்பினரிடமும், பிரதேச செயலரிடமும் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

