சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாக்கும் வாரத்தை முன்னிட்டு நிறைவு நிகழ்வாக நெடுந்தீவு (J/3) கடற்கரையில் யாழ் மாவட்ட கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டிலும் தாரணி சூப்பர்மார்க்கெட் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பிலும் கடற்கரையை துப்புரவு செய்யும் நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வானது மாவட்ட உத்தியோகத்தர் தலைமையில் சக உத்தியோகத்தர்கள் மற்றும் J/3 பிரிவு கிராமசேவை உத்தியோகத்தர், பொதுமக்கள், பிரதேசசபையனர் இணைந்து வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டது.