நெடுந்தீவில் உள்ள அனைத்து சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவருக்கும்இலங்கை சைவநெறிக் கழகத்தால் சைவசமயதீக்கை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.08) காலை 7.30 மணிக்கு நெடுந்தீவு கிழக்கு 13 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு மனோன்மணி அம்மன் திருக்கோயிலில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் சைவசமயத்தார் யாவரும் கலந்து பயன்பெறலாம் என்பதுடன், அறநெறி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சைவசமயதீக்கைபெற்றுக்கொள்ளும் ஏனையோருக்கும் சைவசமய அனுட்டானப்பயிற்சியும்சிவவழிபாட்டுப் பயிற்சியும் வழங்கப்படவுள்ளதுடன் மாகேசுவரபூசையும்நடைபெறவுள்ளது.
இதேவேளை சைவசமயமே இன்பநெறி என்னும் தலைப்பில் சொற்பொழிவும் நெடுந்தீவில் உள்ள அனைத்து அறநெறிப் பாடசாலை மாணவர்பெற்றோருடனான சைவசமய வாழ்வியல் குறித்த கலந்துரையாடலும்சனிக்கிழமை (செப்.7) மாலை 3.00மணிக்கு அருள்மிகு மனோன்மணி அம்மன் திருக்கோயிலில் நடைபெறவுள்ளது.
சைவ அன்பர் யாவரும் இந்நிகழ்வுகளில் கலந்து பயன்பெறுமாறு இலங்கை சைவநெறிக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.