இவ்வார நீண்ட விடுமுறை நாள்களைக் கருத்தில்கொண்டு, நாளை புதன்கிழமை (21) முதல் நாடளாவிய ரீதியில் சிறப்புத் தனிமைப்படுத்தல் தொடர்பான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சளார் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறிப்பாக, மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் பகுதிகள் மற்றும் ஏனைய மாகாணங்களில் இருந்து வெளியேறும் மற்றும் உள்நுழையும் பகுதிகளில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.
அத்துடன், மேல் மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முகக்கவசம் தொடர்பில் மேலதிக கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையே பயணிப்பதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நெருங்கிய உறவினர்களின் மரணம் மற்றும் மருத்துவ
தேவைகளுக்காக மட்டும் மாகாணங்களுக்கு இடையே பயணிப்பதற்கு அனுமதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.