நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையிலுள்ள 20 உறுப்பினர்களைக் கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 11 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
அத்துடன், எட்டு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்ததுடன் ஒருவர் நடுநிலை வகித்தார்.
மேலும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இருவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் ஐவர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் என எட்டுப் பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
இதனடிப்படையில் நல்லூர் பிரதேசசபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது