நயினாதீவு வடக்கு கடல் தொழிலாளர் சங்கதினரால் clean Sri Lanka திட்டத்திட் கீழ் நேற்றையதினம் (பெப். 07) கடற்கரை சிரமதானம் இடம்பெற்றது.
நயினாதீவி கடற்கரையை சூழ உள்ள பகுதியில் ஒதுங்கியுள்ள பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் ஏனைய பிளாஸ்ரிக்கழிவுப்பொருட்களை சிரமதானம் மூலம் சேகரித்து நயினாதீவு பிரதேச சபைஊடாக அளிப்பு நடவடிக்கைக்காக அனுப்ப வழங்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடந்து கடற்கரையிலுள்ள கழிவுப்பொருட்களை சுத்தம் செய்யும் நிகழ்வுஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறும் எனவும் நயினாதீவு வடக்கு கடற்றொழிலாளர் சங்க தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.