தொடர்ந்தும் இயங்கும் கல்வியல் கல்லூரிகள்
நாட்டில் உள்ள பெரும்பாலான கல்வியல் கல்லூரிகள் தமது கற்றல் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகத் வருதவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்வியல் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் தங்கியிருந்து தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதால் சமூகத் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இன்மையால் தொடர்ந்து கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகத் தெரிவிக்கப்;படுகின்றது.
இதேவேளை தாம் குறுகிய கால விடுமுறை ஒன்றினை வழங்க உத்தேசித்திருந்த போதும் விடுமுறைகள் எவையும் வழங்க வேண்டாம் எனவும், தனிப்பட்;ட விடுமுறைகளுக்குச் சென்ற மாணவர்களை தற்காலிகமாக உள்ளெடுப்பதனைத் தவிர்க்குமாறும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாணம் கல்வியல் கல்லூரியின் பீடாதிபதி சு.பரமானந்தம் தெரிவித்தார்.