நுவரெலியாவில் தேர்தல் கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 10 சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் (ஆசிரியர்கள்) கடமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ரோஹன புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார்.
இந்த அதிகாரிகள் 10 பேரும் அரசியல்கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தமை உறுதி செய்யப்பட்டதால் அவர்களை தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் அவர்களுக்கு எதிராக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.