ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செயற்படுத்தப்பட்டும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 02) திறந்து வைக்கப்பட்டது.
இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதையடுத்து நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட இடத்துக்கு சென்றடைந்த ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நீர்ப்பாசன மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரது பிரசன்னத்துடன் குறித்த திட்டத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.