காதலனுடன் தொலைபேசியில் உரையாடுவதை கண்டித்ததால் மாணவியொருவர் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துள்ளார்.
நேற்று (October 10) அதிகளவான மாத்திரை உட்கொண்ட நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தருமபுரம் மகாவித்தியாலத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவியே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.