யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா நிகழ்வுகள் ஜூன் 8ஆம் திகதி பிரான்ஸில் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் நகரத்தின் புறநகரான Villeneuve-Saint-Georges பகுதியில் அமைந்துள்ள Espace Shine மண்டபம் இந்நிகழ்விற்கான மேடையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில், பிரான்ஸில் வாழும் பழைய மாணவர்களோடு மட்டும் அல்லாது, ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்து வருகை தரும் யாழ். பல்கலைக்கழக பழைய மாணவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் முன்னிறுத்தும் கலை நிகழ்ச்சிகளும், சிறப்பான இரவு விருந்தும் இந்த விழாவின் சிறப்பம்சங்களாக அமையும்.
யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த நிகழ்வு, LIFT ஆய்வு அறக்கட்டளை அமைப்பின் அனுசரணையுடன், பிரான்ஸில் வாழும் யாழ் பல்கலை பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் இணைந்து ஏற்பாடு செய்து வருகின்றனர்.
LIFT அறக்கட்டளை, யாழ். பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும், வடகிழக்கு பகுதி முன்னேற்றத்திற்கும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
நிகழ்விற்கான நுழைவுச்சீட்டுகளை இப்போது முதலே பெற்றுக்கொள்ளலாம்.
விரும்புவோர் Jossey: +33 6 63 30 44 09 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவாக சீட்டுகளை பெறலாம்.
நிகழ்வுநாள் மண்டபத்தில் நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்படமாட்டாது என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
மேலும் தகவல்களுக்கு, WhatsApp மூலம் +33 7 53 50 93 96 என்ற எண்ணில் அல்லது uojfrance@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் எனவும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.