தேசிய நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சி கூட்டம் இன்று(ஜூலை 26) நடைபெறவுள்ளது.
மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த கூட்டத்தில் பங்கேற்க தீர்மானித்துள்ளது.
மக்கள் சார்பில் கலந்து கொண்டாலும் அரசியல் சதிகளில் சிக்குவதற்கு தயார் இல்லையென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் தாம் பங்கேற்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.
இந்த சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி இன்றைய சர்வகட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
தேசிய பிரச்சினைகளை தீர்ப்பதாக ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தேசிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.