மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே தெரிவு செய்யப்பட வேண்டும் எனதாம் விரும்புவதாகவும் அதுவே தற்கால சூழலுக்கும் தமிழ் மக்களுக்கும்சரியானதெரிவாக இருக்கும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும்கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றையதினம் (ஜூலை27) இடம்பெற்ற மாவட்ட மற்றும் பிரதேச பொறுப்பாளர்கள்முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான கால அட்டவணையை தேர்தல்ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதேநேரம் குறித்த திகதியில் தேர்தல்நடைபெற்றாலும் சரி இல்லாதுவிட்டாலும் சரி தேர்தலை எதிர்கொள்வதற்கானஅனைத்து செயற்பாடுகளிலும் நாம் தயாராகவே இருக்கவேண்டும்.
தற்போதைய தேர்தல் களத்தில் பலதரப்பட்ட போட்டியாளர்கள்போட்டியிடவுள்ளதாக தெரிவித்தாலும் குறித்த ஒரு சிலருக்கிடையேதான் கடும்போட்டி நிலவும் என நினைக்கின்றேன்.
இதில் தற்போதைய ஜனாதிபதியே முதன்மையானவராக இருப்பார். குறிப்பாகரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பளிப்பதானதுதமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பானஎதிர்காலத்தை உருவாக்க வாய்ப்பளிக்கும் ஒன்றாக இருக்கும் எனநினைக்கின்றேன்..
2005 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தபொழுது தமிழ் மக்களை சுயநலன்களுக்கு அப்பால் சிந்தித்து, அன்றே அவருக்குஅந்த வாய்ப்பை கொடுத்திருந்தால் இன்று தமிழ் மக்களின் வாழ்வியல்சிறப்பானதாக அமைந்திருக்கும். ஆனால் அன்று தவறவிட்டுவிடப்பட்டுவிட்து
ஏனென்றால் தமிழ் மக்களது வாக்குகள் ஊடாகத்தான் ஜனாதிபதி ஒருவர்வெல்லக்கூடிய வாய்ப்பு 2005 இருந்தது. அன்று அந்த வாய்ப்பை ரணில்விக்ரமசிங்கவுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் இந்த பாழாப் போன யுத்தமோஅல்லது இத்தனை துன்பங்களை துயரங்களை இடம்பெருவுகளை எமது மக்கள்சந்தித்து இருக்க மாட்டார்கள் .
அதே நேரம் எமது மக்களுக்கு தற்போதும் ஜனாதிபதி தேர்தல் என்ற வாய்ப்புகிடைக்கவுள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் இன்றையஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதன் ஊடாக நாடும் எங்களுடைய மக்களும்அதிக பயன்களை பெறலாம் என நான் நம்புகின்றேன்.
ஆனால் கடந்த இரண்டு வருடதுக்குள் ஜனாதிபதி தன்னுடைய ஆற்றலால்தன்னுடைய செயல்பாட்டால் நாட்டுக்கு நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கிதந்திருக்கின்றர். அதனால் அவருக்கு நாங்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தைகொடுக்க வேண்டும் என்று விருப்புகின்றேன்.
அந்த வகையில் எதிர்வரும் காலங்களிலும் அந்த சந்தர்ப்பத்தை ரணில்விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாகவும் அவரோடு சேர்ந்து பயணிப்பதற்குஊடாகவும் எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் இருந்துவெளியில் வரலாம் என்று நினைக்கின்றேன் என்றும்அவர் தெரிவித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.