திருத்த வேலைகளின் பின்னர் நெடுந்தீவு பயணிகளுக்காக நேற்று முன்தினம் சனிக்கழமை (ஜூலை 28) சேவையில் ஈடுபடத் தயாராக இருந்த குமுதினி படகானது மீண்டும் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.
திருத்த வேலைகளின் பின்னர் குமுதினி படகு சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிகழ்வு குறிக்காட்டுவான் இறங்குதுறையில் நேற்று முன்தினம் ஆரம்பமாக இருந்தது.
இந்த நிலையிலேயே படகு மீண்டு குறிகாட்டுவான் – நெடுந்தீவு பயணிகள் சேவையில் ஈடுபட்டு வரும் குமுதினி படகு அடிக்கடி பழுதடைந்து வந்தது. இதைத் தொடர்ந்து இந்தப் படகு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு திருத்தப்பட்டது.
ஐந்து தடவை பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்தப்பட்ட இந்தப் படகு நேற்று முன்தினம் சேவையை ஆரம்பிக்க இருந்தது எனினும் படகு பழுதடைந்ததால் சேவை ஆரம்பிக்கப்படவில்லை. பழுதடைந்த படகை நீர்கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர் குரூஸ் தெரிவித்தார். குமுதினி படகு 1968ஆம் ஆண்டு தொடக்கம் நெடுந்தீவு – குறிகாட்டுவான் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. (நன்றி ஈழநாடு)