தற்போதைய கொரோனா இடர் கால நிலைமைகளைக் கருத்திற் கொண்டு US AID நிறுவனத்தின் நிதியுதவியில் இன்றைய தினம் (ஜீலை 30) வைத்தியசாலை தொண்டர்கள் 30 பேர் மூன்று மாத காலத்திற்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுடன் நியமிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 24 தொண்டர்களும் கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் 05 உத்தியோகத்தர்களும் நெடுந்தீவில் சுகாதார பரிசோதகருக்கு உதவியாளராக ஒருவருமாக 30 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பணி புரியும் நாளுக்கு ரூபாய் 1000.00 ஊக்குவிப்பு கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதுடன் தெடர்ச்சியாக 03 மாதகாலத்திற்கு இச் செயற்றிட்டம் நடைமுறையில் காணப்படும்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்க யாழ் கிளையில் இன்றைய தினம் இடம் பெற்ற இந்நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை உதவிப்பணிப்பாளர் வைத்தியர் சண்முகராஜா அவர்களும் வைத்தியர் சிவபாதமூர்த்தி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கொரோனா கால நிலமைகளைக் கருத்திற் கொண்டு மேற்படி செயற்றிட்டம் செஞ்சிலுவைச் சங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை வரவேற்கத்தக்கது.