சுனாமி ஆழிப் பேரலையினால் காவுகொள்ளப்பட்டோரின் நினைவேந்தல் யாழ் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை சுனாமி நினைவாலையத்தில் இன்று (டிசம்பா் – 26) முன்னெடுக்கப்பட்டது.
பொது அமைப்புக்களின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்றது.
வடமராட்சி கிழக்குப் பகுதியில் 1000 கணக்காணோர் காவுகொள்ளப்பட்டனர், குறித்த நினைவாலையத்தில் 1001ன் உடல்கள் புதைக்கப்பட்டு நினைவாலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று 100க் கணக்கான உறவுகள் சுகாதார முறைப்படி கூடி அஞ்சலி செலுத்தினர், இதில் பிரதான நினைவுத்தூபிக்கு பாரளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறிதரன் மற்றும் பொன்னம்பலம் கஜேந்திரகுமாா் ஆகியோ் ஈகைச்சுடாினை ஏற்றி வைத்தாா் அதனைத் தொடா்ந்து உறவினா்கள் தமது உயிா் தீத்த உறவுகளுக்கான சுடரை ஏற்றி கண்ணீா் மல்க கதறி அழுதனா்.