சுனாமிப் பேரவலம் நடைபெற்று நாளையுடன் 18 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் நினைவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சுனாமிப் பேரவலத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கான ஏற்பாடுகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாளை காலை 9.25 மணியிலிருந்து இரு நிமிடங்கள் மக்கள் அனைவரும் இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளது.
2004 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி சுமந்திரா தீவுகள் அருகில் கடலுக்கடியில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு நில நடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அலைகள் நாடுகளைத் தாக்கின.
இந்தோனேசியா, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் கரையோரங்கள் சுனாமி அலைகளால் பெரிதும் பாதிப்படைந்தன.
இந்த சுனாமி பேரலைகளால் 14 நாடுகளைச் சேர்ந்த சுமார் இரண்டரை லட்சம் மக்கள் உயிரிழந்தனர். இலங்கையில் சுமார் 35 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல் போயினர்.