யாழ் போதனா வைத்தியசாலை விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்கள் அந் நாட்களில் ஓய்வெடுக்க, குளித்து உடை மாற்றிகொள்ள வசதிகள் செய்யும் வகையில் “சிவசி இல்லம்” யாழ் நகரில் கடந்த (ஜூன் 17 ) திங்கட்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.
இல.76, வைத்தியசாலை வீதியில் (சத்திரச்சந்திக்கு அண்மையில் ) “சிவசிஇல்லம் “ நோயாளிகளின் உறவினருக்கான உதவி நிலையம் அமைந்துள்ளதுடன் இந்த இலவச சேவையை யாழ் போதனா வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச்சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இச் சேவையினை பெறவிரும்புவோர் யாழ் போதனா வைத்தியசாலை நலன்புரிச்சங்க நோயாளர் பராமரிப்பு காரியாலயத்தில் விண்ணப்பப்படிவத்தை பெற்று
நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் விடுதிகளுக்கு பொறுப்பான தாதியஉத்தியோகத்தரிடம் சிபார்சு படிவத்தை கையளிக்க வேண்டும்.தகுதியானவர்கள் இந்த இலவச சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு:
1.வைத்திய சாலை நலன்புரிச் சங்கம் – 0761000046.
சிவசி இல்ல இணைப்பாளர் – 0770054829
யாழ் போதனா வைத்தியசாலைக்கு வெளியிடங்களில் இருந்து தங்கி சிகிச்சை பெற வரும் நோயாளர்களுடன் வருகின்ற உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள்யாழ் நகரில் தங்குவதற்கு பல சிரமங்களை எதிர்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.