கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நிறுவுனர் நாளை நினைவு கூறும் வகையிலான நூற்றாண்டு நிகழ்வுகள் இன்று(ஒக்ரோபர் 1) காலை கலாசாலையில் நடைபெற்றது.
காலை 6.30 மணிக்கு பொங்கல் வழிபாடு இடம் பெற்று அதனைத் தொடர்ந்து யோகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூசை இடம்பெற்று பண்பாட்டு பவனி ஆரம்பமானது.
ஷ
பண்பாட்டு பவானியின் போது சைவ, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களை சார்ந்த கொடிகள் எடுத்துவரப்பட்டதுடன் நூற்றாண்டை குறிக்கும் வகையில் 101 நிறைகுடங்களுடனான ஊர்வலம் மங்கள வாத்தியத்துடன் எடுத்துவரப்பட்டது.
கலாசாலையின் அதிபர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் திரு இ.இளங்கோவன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலாசாலையின் முன்னாள் அதிபர்களான திரு வே.கா கணபதிப்பிள்ளை, திரு வீ.கருணைலிங்கம் ஆகியோரும் கௌரவ விருந்தினராக நீர்வேலி கரந்தன் இராமுபிள்ளை வித்தியாலய அதிபர் திருமதி சாந்தினி வாகீசன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.