வவுனியா மண்ணின் சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்.
ரொய்ட்டர், பிபிசி, வீரகேசரி மற்றும் மின்னிதழ்களில் செய்தியாளராகவும் கட்டுரை ஆசிரியராகவும் செயற்பட்டுவந்த பொன்னையா மாணிக்கவாசகம், நள்ளிரவு (12 ஏப்ரல்) 12.40 மணி அளவில் இம்மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டு எம்மிடமிருந்து விடைபெற்றார்.
அன்றைய நாட்களில் இரவு 9.15 மணிக்கு ஒலிபரப்பாகும் பிபிசியின் தமிழோசை கேட்காமல் குறிப்பாக இலங்கை செய்திகளில் வடமாகாண செய்தியாளர் மாணிக்கவாசகத்தின் செய்திகளையும் பெட்டகங்களையும் கேட்காமல் உறங்குவதில்லை என்பது பலரது நிலைப்பாடு.
கடந்த 01.04.2023 அன்று தனது 76 ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடியவர், இன்று (12 ஏப்ரல்) எம்மிடமிருந்து விடைபெற்றார் என்ற துயரமான செய்தியை வெளியிடும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டது.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை வியழக்கிழமை (13 ஏப்ரல்) நடைபெறும்.