சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்குவழிவகுத்துள்ளதாக இலங்கை சிவில் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 200இற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலைசெய்துகொண்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் விசேடமருத்துவர் கபில ஜயரத்ன தெரிவித்தார்.
“2022 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 133 சிறுவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அதிகாரப்பூர்வமற்ற தரவுகளின் படி, கடந்த ஆண்டு 270 சிறுவர்கள்தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவை அனைத்திற்கும்பல்வேறு காரணங்கள் உள்ளன. சமூக ஊடகங்களை தடை செய்வதே இவற்றைதடுக்க எம்மால் இயன்ற முதலாவது செயற்பாடாகும்.
ஒரு நாடாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்கள்சேகரிக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரம் அல்லது இரண்டு வாரங்களில் இது குறித்ததகவல்களை வெளியிட எதிர்பார்க்கிறோம். குழந்தைகளுக்காக சமூகஊடகங்களைப் பயன்படுத்துவதில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டும்உள்ளன. இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த பரிந்துரைகளைவழங்கலாம் என எதிர்பார்க்கிறோம்“