சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உலக நீர் தின நிகழ்வுகள் நேற்று (மார்ச் 22) புதன்கிழமை காலை 8 மணிக்கு நவாலி கிழக்கு சென் பீட்டர்ஸ் தேவாலய பொதுக் குடி தண்ணீர் கிணற்றடியில் நடைபெற்றது.
கியூடெக் ஹரிதாஸ் நிறுவன அனுசரணையில் இந்தப் பொதுக்கிணறு சுகாதார முறைப்படி துப்புரவு செய்யப்பட்டு கியூடெக் ஹரிதாஸ் நிறுவன இயக்குநர் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் நீர் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஆக்கபூர்வமான கருத்துரைகள்இடம் பெற்றன.
நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் மற்றும் பிரதேச செயலக கிராமமட்ட உத்தியோகத்தர்கள் ஆலய பங்குத்தந்தை பொதுச் சுகாதார பரிசோதகர் சென். பீற்றர்ஸ் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் ,மாணவர்கள் சென் பீட்டர்ஸ் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் குடிநீர் பாவனையாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
சென். பீற்றர்ஸ் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் நீர் முக்கியத்துவத்தை உணர்த்தும் பதாதைகள் ஏந்திய நடைபவனியும் இடம் பெற்றது.