நெடுந்தீவு மேற்கு லோறஞ்சியார் ஆலயத்திற்கு அண்மித்த கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மண் ஏற்றப்பட்டு கடலரிப்பினை ஏற்படுதத்க்கூடடிய தன்மையினை கடற்கரைக்கு அண்மையில் மேற்கொண்டுள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நெடுந்தீவு தெற்கு ஜே/02 கிராம சேவையாளர் பகுதியில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது 100 மீற்றர் நீளத்தில் 5 அடி அகலத்தில் 3அடி ஆழத்தில் மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது அண்ணளவாக 60 டிரக்ரர் மண்ணிற்று மேல் ஏற்றப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இச் செயற்பாடு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம் பெற்றதாகவும் மணல் டிரக்ரர் மூலம் கொண்டு செல்லப்பட்டு பல்வேறு காணிகளில் பறிக்கப்பட்டுள்ளதாகவும், அறிய முடிகின்றது. நெடுந்தீவில் மணல் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி பல வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து மணல் பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கட்டிட வேலைகளும் மேற்கொள்ளப்படுகின்றது.
இது தொடர்பாக பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் அரசாங்க அதிபர் சூழலியல் திணைக்களம் கடலோரப்பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றுடன் பல்வேறு ஊடகங்கள் கிராம மக்கள் தொடர்பு கொண்டுள்ளதுடன் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நெடுந்தீவு பொலிசாருக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்க்ப்படுகின்றது.
ஏற்றப்பட்ட மணல் சில இடங்களில் பறிக்கப்பட்டுள்ளதுடன் மணல் பறிக்கப்பட்ட இடங்களிற்கு அண்மையில் இறைச்சிக்காக கால்நடைகள் வெட்டப்பட்ட அடையாயங்களும் காணப்படுகின்றது.
அண்மைக்காலங்களாக நெடுந்தீவு மேற்கு பிரதேசத்தில் கால்நடைகள் களவு போவது குறித்து பல இடங்களில் பேசப்பட்டு வந்தது. மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கும் இக் கால்நடை களவுகளுடன் தொடா்பு உள்ளதா என்பது மக்களது கேள்வியாக இருக்கின்றது.